HOP Church

Dec 11, 20201 min

பாவ கட்டிலிருந்து விடுதலை உண்டாக ஜெபிப்போம்

பாவ கட்டிலிருந்து விடுதலை உண்டாக ஜெபிப்போம்

பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம். ஒரு மனிதன் பாவ பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கும் வரை நாம் என்னதான் விதைத்தாலும் அந்த விதையானது அவர்கள் இருதயத்தில் கிரியை செய்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. பாப கட்டுகளில் இருந்து அவர்கள் விடுதலை பெறும்படி ஜெபிப்பது நமக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது.

எப்படிப்பட்ட அடிமை தனங்களில் அவர்கள் சிக்கி இருக்கிறார்களோ அதிலிருந்து அவர்கள் விடுபடும் படி அதை சொல்லி ஜெபிப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது. நாம் ஜெபிக்கும்போது அந்த பாவ கட்டிலிருந்து அவர்களுக்கு ஒரு விடுதலை உண்டாகும். எனவே குறிப்பாக நாம் ஜெபிப்போம் அந்த ஆத்துமா விடுதலை ஆகும் போது இரட்சிப்புக்கு ஏதுவான மாற்றம் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் உண்டாகும்.

ரோமர் 6:18

பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்


மனப்பாட வசனம்

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.

1 தீமோத்தேயு 1:15


ஜெபக்குறிப்புகள்

1. பாவ கட்டில் இருந்து அவர்களுக்கு விடுதலை உண்டாக

2. பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் உண்டாக

3. அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டு மனம் திரும்ப அவர்கள் முன்வர

4. அடிமைத்தனங்கள் மாற

5. குமாரன் அவர்களை விடுதலை ஆக்க

6. மெய்யான விடுதலை அவர்கள் வாழ்வில் உண்டாக

7. பாவத்தை மேற்கொள்ளும் கிருபையை அவர்கள் பெற்றுக்கொள்ள

8. அவர்கள் செய்வது தவறு என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள

9. பிசாசினால் கட்டப்பட்டவர்கள் விடுதலையாக

10. இயேசுவின் நாமத்தினால் அவர்கள் விடுதலை பெற்றுக் கொள்ள

    32
    1