HOP Church

Dec 16, 20201 min

இரட்சிப்பு என்பது தேவனுடைய கிருபை வரம்

இரட்சிப்பு என்பது தேவனுடைய கிருபை வரம்

பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் சொல்லுகிறது. ஒரு மனுஷன் பாவம் செய்யும்பொழுது அவனுக்கு மரணமே காத்திருக்கிறது. அந்தப் பாவத்திலிருந்து அவன் விடுபடும் அளவும் தேவனுடைய கிருபை வரத்தை அவனால் சுதந்தரிக்க முடியாது. தேவ அன்பை சாய்ந்து கொள்ளும்போது மாத்திரமே அவர் கொடுக்கிற தானே கிருபையின் வரங்களை ஒரு மனிதனால் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே தேவனுடைய கிருபையை அவர்கள் ருசிக்கும்படியான வாய்ப்புகளை தேவன் ஏற்படுத்தி தரும்படி அவர்களுக்காக ஜெபிப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது.

ரோமர் 6:23

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்


மனப்பாட வசனம்

அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்

அப்போஸ்தலர் 16:31


ஜெபக்குறிப்புகள்

1. பாவத்தின் கட்டுகளில் இருந்து அவர்கள் விடுதலையாக

2. இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசம் உண்டாக

3. அவர்கள் தேவ அன்பை பற்றிக்கொள்ள

4. தேவனுடைய கிருபையை அவர்கள் பெற்றுக்கொள்ள

5. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு அவர்கள் இரட்சிக்கப்பட

6. இரட்சிக்க படக்கூடாதபடி இருக்கும் தடைகள் மாற

7. அவர்கள் மன கண்கள் திறக்கப்பட

8. இருதய கடினங்கள் மாற

9. இயேசுவே தெய்வம் என்பதை உணர்ந்து கொள்ள

10. அவர்கள் நிமித்தம் பரலோகத்தில் மகிழ்ச்சி உண்டாக

    36
    1