HOP Church

Dec 17, 20201 min

இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற ஜெபம்.செய்வோம்

இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற ஜெபம்.செய்வோம்

ஒரு நபருடைய ஆத்தும இரட்சிப்புக்காக நாம் ஜெபிக்கும்போது நம் நினைவில் வைத்திருக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அவர்கள் இருளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலையாகி தேவனுடைய ஒளியின் ராஜ்யத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த விடுதலை உண்டாகும்படி நாம் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

குமாரன் விடுதலை செய்தால் மட்டுமே மெய்யான விடுதலை உண்டாகும். எனவே தேவன் அவர்களை எல்லாம் இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை ஆக்கும்படி நாம் முழங்காலில் யுத்தம் செய்வது நம்முடைய கடமையாக இருக்கிறது.

கொலோசெயர் 1:13

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்


மனப்பாட வசனம்

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

2 கொரிந்தியர் 5:21


ஜெபக்குறிப்புகள்

1. குமாரனாகிய கிறிஸ்து அவர்களை விடுதலையாக்க

2. சத்தியத்தை அவர்கள் அறிந்துகொள்ள

3. சத்தியத்தால் அவர்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்ள

4. பாவ கட்டுகளில் இருந்து விடுதலை உண்டாக

5. அக்கிரமங்களில் இருந்து அவர்கள் விடுதலை ஆக

6. அடிமைத்தனங்கள் மாற

7. அவர்கள் வாழ்வில் போராட நினைக்கும் சத்துரு செயலிழந்து போக

8. தேவ கரம் அவர்களை தாங்க

9. பாவத்தை மேற்கொள்ளும் கிருபைக்காக

10. தேவ நாமம் மகிமைப்பட அவர்கள் இரட்சிக்கப்பட

    24
    2