HOP Church

Nov 11, 20201 min

சரியான தெரிவு

தேவன் ஆதாமையும் ஏவாளையும் தமது சாயலின்படி சுய சித்தத்துடன் உருவாக்கினார்....

தெரிந்து எடுக்கக்கூடிய சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுத்தார்....

உன் எதிர்காலம் நீ எடுக்கக்கூடிய தீர்மானத்தை பொறுத்தே இருக்கிறது....

ஆதாமும் ஏவாளும் தேவன் கொடுத்த பொக்கிஷத்தை ஆராய்ந்து ஜீவ விருட்சத்தின் கனியை முதலில் சாப்பிட்டு இருந்தால்....

ஒருவேளை தேவன் நன்மை தீமை அறியத்தக்க கனியை தோட்டத்திலிருந்து எடுத்திருக்கலாம்.....

அவர்கள் பாவம் செய்துகொண்டே நீண்டநாள் ஜீவிக்க முடியாது....

ஆனால் அவர்களோ வேண்டாம் என்று சொல்லப்பட்ட கனியின் பின் ஓடினார்கள்....

இறந்து போன அதிகாரத்தை திரும்ப பெற்றுத்தர இதே தன் வேறொரு திட்டத்தை வைத்திருந்தார் ஆனால் அதற்கு மிகவும் நேரம் எடுத்தது.....

இன்று உன் தெரிந்தெடுப்பு எது? தேவன் வேண்டாம் என்று புறக்கணித்ததின் பின் ஓடாதே....

ஆதியாகமம் 3:22

பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று

நீ எதை தெரிந்து எடுக்கிறாயோ அதுதான் மாற்றத்தைக் கொண்டுவரும்! சரியானதை தெரிவு செய்!! தேவன் புறக்கணித்த காரியத்தின் பின் ஓடாதே!!!

    6
    0