திறவுகோல்கள் அவரிடத்தில் உள்ளது
- HOP Church
- Nov 14, 2020
- 1 min read
என் தேவன் திறவுகோல் களை உடையவர்!
அவர் பூட்டினதை ஒரு மனுஷனும் திறக்க முடியாது...
அவர் திறக்கிறதை யாரும் அடைக்க முடியாது...
அவர் கதவை மூடினால் அது நீ செல்லக்கூடிய வாசல் அல்ல என்று அர்த்தம், திரும்பவும் தட்டிக் கொண்டிருக்காதே...
அவர் கதவைத்திறந்தால் பயப்பட வேண்டாம். நடந்து செல்...
வெளி 3:7
பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், "தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவர், ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்".
கதவுகளை பூட்டுகிறவரும், திறக்கிறவரும் அவர் ஒருவரே! அவர் சரியான கதவை திறப்பார்!! அவர் உன் கதவை திறக்கும் வரை பொறுமையுடன் காத்திரு!!!


Comments