HOP Church

Oct 6, 20201 min

நீ குயவன் கையில் களிமண்

தேவன் நம்முடைய கரத்தின் கிரியைகளை எல்லாம் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்....

நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் தேவன் நம் பட்சத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்....

நாம் எத்தனை முறை விழுந்தாலும் தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து மறக்க வேண்டும் என்று விரும்புகிறோம்....

நாம் உண்மை அற்றவர்களாக இருந்தபோதிலும் தேவன் தம்முடைய ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்....

பெற்றுக்கொள்ளும்போது அவரை தகப்பன் என்று அழைக்கிறோம்....

அவர் விரும்புகிற காரியத்தை நம்முடைய வாழ்வில் செய்ய ஒப்புக் கொடுக்கிறோமா?

நம்மை ஆசீர்வதிக்க அவருக்கு உரிமை இருக்கும் என்றால் நம்மை உருவாக்கும் அவருக்கு உரிமை உண்டு!!

எரேமியா 18:6

இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்

நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் குயவன் கையில் களிமண்! உங்கள் வாழ்க்கையில் அவர் விரும்புகிற சிறந்ததை வெளியே கொண்டுவரும்படி உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு என்பதை நம்புகிறீர்களா???

    23
    0