அனுமதி இல்லை

உனக்கு பொல்லாப்பு செய்ய எதிரிக்கு பலம் இருக்கலாம்...


ஆனால் உனக்கு பொல்லாப்பு செய்ய அவனுக்கு அனுமதி கிடையாது...


தேவன் உன்னோடு இருந்தால் நீ பாதுகாப்பான கரத்திற்குள் இருக்கின்றாய்...


எதிரியினுடைய பலத்தை கண்டு பயப்பட வேண்டாம்...


நீ தேர்ச்சி நபராக இல்லாதிருக்கலாம் ஆனால் பெரிய தேவன் உன் பக்கத்தில் இருக்கிறார்...


எதிரியின் பயமுறுத்தலுக்கு பயப்பட வேண்டாம்...


அவனால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது தேவனுடைய உத்தரவு இல்லாமல் உன்னுடைய தலையில் ஒரு முடியும் கீழே விழாது...


நீ பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கின்றாய் ஏனென்றால் நமக்கு மிகப்பெரிய அப்பா நம்மோடுண்டு...


தேவனுடைய அனுமதியின்றி உன்னுடைய பாதையில் எதுவும் வராது! உனக்கு தீங்கு உண்டாக்கும் எதையும் தேவன் அனுமதிக்க மாட்டார்!! திடன்கொள் பயப்படாதே!!!0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041