அவர் அடிச்சுவடுகளை பின்பற்று

ஆண்டவராகிய இயேசுவின் மாதிரியை பாருங்கள்!


மேலே வானத்திலும் கீழே பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர் அவர்....


அவர் சிலுவையை சுமந்த போது அந்த அதிகாரத்தை பிடித்துக் கொள்ள முயற்சி செய்யவில்லை....


அடிமையின் ரூபம் எடுத்து தன்னை தானே வெறுமை ஆக்கினார்....


அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தும் அமைதியாய் இருப்பதை தெரிந்து கொண்டார்....


நாமோ வேறு விதமாய் நடந்து கொள்கிறோம்....


நாம் அனேக பொருட்கள் மீதும் ஜனங்கள் மீதும் அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிறோம்...


ஆனால் எல்லாவற்றின் மீதும் அதிகாரம் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறோம்.....


அநேக காரியங்களை நாம் அறியாது இருந்தும் ' எல்லாம் தெரியும்' என்ற மனப்பான்மை வெளிப்படுத்துகிறோம்...


நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் ஆனால் உங்களுக்காக கணமும் ஸ்தானமும் தேட மாட்டீர்கள்.....


பிலிப்பியர் 2: 6 - 7


அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்


அவர் உன்னை மண்ணிலிருந்து உருவாக்கினார் நீ மண் என்பதையும் அறிவார்! தேவன் உன்னை தூக்கி எடுத்திருக்கிறார் நீ உயர பறந்து கொண்டு எங்கிருந்து வந்தாய் என்பதை மறந்து போகாதே!! எப்பொழுதும் தாழ்மையாக இருந்து தேவன் உன்னை உயர்த்தும் படி காத்திரு!!!
0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041