அவர் கிருபை

தேவன் கிருபையுள்ளவர் - அதை நீ இலகுவாக எடுத்துக் கொள்ளலாம் என்று அர்த்தமல்ல...


தேவன் அன்புள்ளவர் - ஆதலால் நீ திரும்ப விழுந்து கொண்டே இருக்கலாம் என்று அர்த்தமல்ல...


தேவன் மன்னிக்கிற பிதா - ஆதலால் நீ பாவம் செய்துகொண்டே இருக்கலாம் என்று அர்த்தமல்ல....


நீ பாவத்திற்கு மரித்தவன் ஆனால் இப்படி அதில் நிலைத்திருக்க முடியும்?


தேவனின் அன்பினால் மட்டும் கட்டப்படுவேன் என்று உன் மனதிலும் இதயத்திலும் தீர்மானம் செய்...


கிருபை பாவம் செய்வதற்கு கொடுக்கப்படும் உரிமம் அல்ல...


கிருபை பாவத்தை மேற்கொள்ள தேவனிடமிருந்து கொடுக்கப்படும் வல்லமை...


ரோமர் 6:1&2


ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?


கிருபை நாம் பாவத்தில் நிலைத்திருப்பதற்குரிய உரிமம் அல்ல! தேவன் மன்னிப்பவர், இனி பாவம் செய்யாதே என்று சொல்வார்!! நாம் பாவத்தில் விழாமல் மேற்கொள்ள கொடுக்கப்படும் வல்லமையே கிருபை!!!5 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041