மூன்றரை வருஷங்கள் ஆண்டவராகிய இயேசுவோடு இருந்தும்...
அவருடைய ஆச்சரியமான அற்புதம் நிறைந்த கரங்களின் கிரியைகளை கண்டும்.....
ஆண்டவருடன் நெருக்கமான ஐக்கியம் கொண்டும் ....
அண்ட சராசரங்களையும் படைத்த அவருடைய வார்த்தைகளை அனேக மணி நேரம் கேட்டுக் கொண்டிருந்தும்.....
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பேதுருவால் மீன் பிடிக்கத் போவதை தடுக்க முடியவில்லை...
இயேசுவை தவிர வேறு யாரால் மன்னித்து மீண்டும் எழுப்பி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும்?
கீழே விழுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது ஆனால் விழுந்த இடத்திலேயே உட்கார்ந்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படாது...
அதே போல விழுந்துகொண்டே இருப்பதும் ஏற்கப்படாத செயல்.....
யோவான் 21:3
சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
நீங்கள் இழந்துவிட்டதாக உணர்கிறீர்களா! தேவன் இன்னும் உங்களை நம்புகிறார்!! உங்களை அவரிடமிருந்து பிரித்து செல்லும் செயலை நிறுத்திவிட்டு அவரிடம் ஓடுங்கள்!!!
Comments