அவரிடம் ஓடு

நீ தேவனுக்கு சொந்தமான நபர்....


தேவன் உன்னை மறந்து விட்டார் என்று பிசாசு சொல்லும் பொய்யை நம்பாதே....


தேவனால் உன்மீது அன்பு வைப்பதை நிறுத்த முடியாது - அவர் அன்பு வரையறையற்றது.....


நீ அவரை கிட்டி சேர்வதற்கு உன் பாவம் ஒரு வேளை உன்னை தடுக்கலாம்.....


அவர் உன்னை நினையாமல் இருந்ததும் இல்லை இருக்கவும் மாட்டார்....


அவர் சொந்த ஜீவனைக் கொடுத்து உன்னை மீட்டு இருப்பார் என்றால்....


சிலுவையை சுமக்கும் போது உன்னை நினைத்து இருப்பார் என்றால்.....


விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே உன்னை சொந்தமாக்கி இருப்பார் என்றால்....


நீ அவருக்கு மிகவும் முக்கியம் என்று தானே அர்த்தம்?


யோவான் 10:28


நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை


பிசாசு சொல்லும் பொய்களை நம்பாதே! ஆம் தேவனுடைய அன்பு அளவில்லாதது!! உன்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத தகப்பன் உண்டு - அவரிடம் ஓடு!!!


0 views

Recent Posts

See All
hop church logo.jpg