அவரை நேசி
- HOP Church
- Jul 16, 2020
- 1 min read
தேவனால் அன்பு கூறப்பட வேண்டும் என்று விரும்புகின்றாய்.....
அவர் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்வதை கேட்க விரும்புகிறாய்....
அவருடைய இரக்கத்தை உனக்கு அவர் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய்....
அவரிடம் இருந்து எதிர்பாரா நன்மைகள் பெற்றுக்கொள்ள விரும்புகிறாய்....
அவர் நீ நேசிகின்றாய் என்று சொல்ல நேரம் செலவு செய்கிறாயா?
நீ உண்மையில் முழு மனதோடு அவரை நேசிக்கிறாயா?
உன் அன்பை அவரிடம் நீ வெளிப்படுத்த துவங்கும் போது உன் இருதயம் ஆராதிக்க துவங்கும்....
தாவீது தம் சத்துருக்களிடம் இருந்து தேவன் தன்னை விடுவித்த போது இந்த பாடலை பாடுகிறான்....
தேவன் நேசித்து அவரை ஆராதிக்க நேரம் எடு!
உன் இதயத்தில் அந்த விசேஷித்த இடத்தை பெற்றுக்கொள்ள தகுதி உள்ளவர் வேறு யார் உண்டு?
சங்கீதம் 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
உன்னில் உள்ள யாவும் அவரை நேசிக்கட்டும்! அவர் மீது உனக்கு உள்ள அன்பு அனுதினம் பெருகட்டும்!! அவர் செய்த செயல்களுக்காக அல்ல அவர் உனக்கு யாராக இருக்கிறாரோ அதற்காக அவருக்கு ஆராதனை செய்!!!


Comments