ஆராதனை!

இது உண்மையான ஆராதனை!!!


குஷ்டரோகி தேவனிடத்தில் வந்து தன்னை சுகமாக்க தேவனிடம் கேட்கவில்லை....


தேவனால் தன்னை குணமாக்க முடியும் என்று அறிக்கை செய்கிறான்....


ஆராதனை என்பது அவர் யாராக இருக்கிறார் என்று சொல்லி அவரை உயர்த்துவது....


ஆராதனை என்பது அவர் யாராக இருக்கிறாரோ அதற்காக அவருக்கு மகிமை செலுத்துவது....


உன் தேவைகளையும் சூழ்நிலைகளையும் தள்ளிவிட்டு கர்த்தரை மாத்திரம் முன்பாக வைக்கும்பொழுது நீ ஆராதிக்கத் துவங்குவாய்....


ஆம் அவர் ஒருவரே பாத்திரர்!


அவர் வர்ணிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடையவர்!


மத்தேயு 8:2


அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்


நீ ஆராதிக்கும் போது அற்புதங்கள் தொடரும்! தேவன் மீது உள்ளான அன்பு இருக்கும்போது ஆராதனை வெளிப்படும்!! தேவனே ஆராதனை செய் அவர் ஒருவரே பார்த்திரராக இருக்கிறார்!!!

0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041