top of page

இக்கபோத்

இக்கபோத்!


தேவனுடைய மகிமையை உன்னை விட்டுப் போக விடாதே....


ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போனபோது ஏதேன் தோட்டத்தை விட்டு தேவ பிரசன்னத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்....


கீழ்ப்படியாமை தேவனுடைய மகிமை உன்னிடமிருந்து திருடி விடும்!


சிம்சோன் உலகத்தின் இச்சைகளுக்கு விழுந்தபோது தேவன் கொடுத்த பெலனாகிய மகிமையை இறந்துபோனான்....


பாவ இச்சைகள் தேவனுடைய மகிமையை உன்னிடமிருந்து திருடி விடும்!


உடன்படிக்கைப் பெட்டி சத்துருவால் பிடிக்கப்பட்ட போது மகிமை இஸ்ரவேலை விட்டுப் போனது....


தேவனோடு உள்ள உறவை சத்துரு திருடும்போது மகிமை விட்டுப் போகும்!


மனம் திரும்பி மகிமையை திரும்ப கொண்டு வா....


ஏசாயா 46:13


நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்


தேவனுடைய மகிமையை உன் வாழ்க்கையை விட்டு போகவிடாதே! தேவனுடைய மகிமையை உன் வாழ்க்கையில் இருந்து திருடுவது எதுவோ அது உன் வாழ்க்கை விட்டுப் போகவேண்டும்!! தேவனுடைய மகிமையை திரும்ப கொண்டு வருவதற்கான நேரம் இது!!!






 
 
 

Comments


hop church logo.jpg
bottom of page