இது உன் தெரிவு

இது உன்னுடைய தெரிந்தெடுப்பு..


நீ யாருடன் இருக்கிறாயோ அந்த மனிதர்களுடைய தாக்கம் உன்னில் உண்டு...


சரியான மனிதர்களோடு இணைந்துகொள்...


நீ கேட்கும் காரியத்தின் தாக்கம் உன்னில் உண்டு...


நீ எதை அதிகமாக கேட்டு கவனித்துக்கொண்டிருக்கிறாய்?


உன்னை கட்டி எழுப்பும் தேவனுடைய வார்த்தையை கேட்டு கொண்டிரு....


நீ பார்க்கும் காரியத்தினுடைய தாக்கம் உன்னில் உண்டு...


சுத்தமானதும் நாகரீகமான தையுமே நீ பார்...


உன் கண்களையும் செவிகளையும் எப்படி போஷி? அதனுடைய தாக்கம் உன் உணர்விலும் சிந்தையிலும் காணப்படும்!!


சங்கீதம் 1:1-2


துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


தெய்வ பயம் கொண்ட நல்ல உள்ளமுடைய மனிதர்களோடு இணைந்து கொள்! உன் கண்களுக்கும் செவிகளுக்கும் உன்னை கட்டியெழுப்பும் தேவ வார்த்தையை கொடு!! நீ தேர்வு செய்யும் தீர்மானம் உன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் தாக்கத்தை கொண்டுவரும்!!!


1 view

Recent Posts

See All
hop church logo.jpg