இதுவரை சுமந்து வந்தவர் அவரே

நீ எல்லா பக்கங்களிலும் நெருக்கப்படும் போது...


உனக்கு முன் இருக்கும் எல்லாமும் இருளாகவும் குழப்பமாகவும் இருக்கும்போது.....


விடுதலை அகம்படி நீ செய்யும் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடியும்போது....


சொல்வதற்கு எதுவும் வார்த்தை இல்லாமல் கண்ணீர் உன் கண்களில் வெளியாகும்போது....


பிரச்சினைகள் வாழ்க்கையில் பெருகும்போது ....


காரணம் என்று நீ நம்பினால் யாவரும் உன்னை விட்டு விலகும் போது.....


உன் இருதயம் எப்படி உணரு?


ஒருநிமிடம் நிறுத்தி தேவன் எப்படி உன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தார் என்பதை நினைத்துப் பார்.....


அவர் அதை திரும்ப செய்ய மாட்டாரா?


அவர் கரம் குறுகி விட்டதா?


உன் தகப்பனாகிய தேவன் உன்னை நேசிக்கிறார் உனக்கு எங்கே வேதனையாய் இருக்கிறது என்பதை அறிவார்!


உபாகமம் 1: 31


ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே


எப்பொழுதும் திரும்பிப்பார்த்து தேவனுக்கு நன்றி சொல்! வேறு யார் உன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க முடியும்!! நான் அமைதியாய் தங்கியிருப்பதற்கு பாதுகாப்பான சிறந்த இடம் தேவனுடைய தோள்கள் மட்டுமே - அங்கு இருந்து விலகாது இரு!!!


0 views

Recent Posts

See All
hop church logo.jpg