ஒரு மனிதனுக்கு தேவையான சிறந்த வெகுமதி இயேசு தான்!
நம்மை சுற்றியுள்ள ஜனங்களின் தேவைகளை சந்திப்பது அற்புதமான ஒரு காரியம்....
நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும் தன் வாழ்க்கை முறையினால் இதுதான் நமக்கு கற்றுக் கொடுத்தார்.....
ஆனால் அது அத்துடன் முடிவதில்லை!
பிரச்சினைகள் வேதியல் தீர்வுகள் மூலம் முடிவடைவதில்லை....
ஜனங்களுக்கு தங்கள் வாழ்வின் பிரச்சனை தீர ஆவிக்குரிய தீர்வு தேவை......
பூமியிலுள்ள எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஆண்டவராகிய இயேசு மட்டுமே....
ஒரு நபருக்கு இயேசுவை கொடுத்து இருப்பீர்கள் என்றால் அந்த மனுஷனுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து விட்டீர்கள்!
அப்போஸ்தலர் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி
உனக்கு வாழ்வு கொடுத்தவரின் அன்பை பற்றி பேச ஒருபோதும் வெட்கப்படாதே! இயேசு - ஒரு நபருக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய சிறந்த வெகுமதி!! உங்கள் வாழ்வில் இருப்பதெல்லாம் இயேசுதான் என்றால் உங்கள் வாழ்வுக்கு தேவையான எல்லாவற்றையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்!!!
Comments