இயேசுவின் அன்பு
- HOP Church
- Nov 27, 2020
- 1 min read
இது அளவற்ற அன்பு!!!
உன் அழைப்பை ஒருபோதும் நிராகரிக்காத ஒரு நபர் உண்டு...
உன் சிறு செய்திகளை அவர் புறக்கணிப்பது இல்லை....
உன் நீண்ட கடிதங்கள் அவரை எரிச்சல் ஆக்குவது இல்லை....
உன் வாயின் வார்த்தைகளை அவர் எப்பொழுதும் புரிந்து கொள்கிறார்....
அவர் எப்பொழுதும் தொடர்பு எல்லைக்குள் இருக்கிறார்....
அவரை தொடர்பு கொள்வதில் ஒரு போதும் உனக்குப் பிரச்சனை இருக்காது....
வேறு யாராக இருக்க முடியும்?
இயேசு! அவர் உனக்கு யாராக இருக்கிறாரோ அதற்காக அவரை நேசி!!!
எரேமியா 31:3
பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்
என் இயேசுவை போல் யாரால் உன்னை நேசிக்க கூடும்! அளவற்ற வரையறையற்ற அன்பு!! பிதாவின் ஒப்பற்ற அன்பு!!!


Comments