நீ எங்கே போகிறாய் என்பதை அறிவாயா?
செலுத்த வேண்டிய கிரயம் என்ன என்பதை அறிவாயா?
நீ பரலோக அழைப்பின் நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறாய் என்ற உறுதியுடன் இருக்கிறாயா?
இந்த உலகத்தின் ஆசைகள் உன்னை வழி விலகச் செய்யாதவடி உறுதியாய் இருக்கிறாயா?
வழி விலகும் காரியம் வரும்பொழுது அழைப்பின் நோக்கத்திற்கு உன்னை நீ சரி செய்து கொள்கிறாயா?
தேவன் வைத்திராத காரியங்கள் உன் பாதையில் குறுக்கிடும் பொழுது "இது எனக்கானது அல்ல' என்று சொல்லிக் கொள்கிறாயா?
கவனம் உள்ளவனாக இரு தேவன் உனக்கு வைத்திருக்கும் இலக்கை நோக்கி ஓடு...
நீ வசதியான சூழலில் இருக்கும் பொழுது அது தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அல்ல என்று அறிந்தால் - அந்த இடத்தை விட்டு கடந்து செல்...
பிலிப்பியர் 3:14
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
தேவனுடைய சித்தத்திற்கு உள்ளே உன் வாழ்க்கையை கட்டியெழுப்பு! பரம அழைப்பிற்கு கீழ்ப்படிதல் உள்ளவனாய் இரு!! என்ன வந்தாலும் உன்னுடைய இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இரு!!!
Comments