உன்னை விசாரிக்கிறவர் யார் என்பதை நீ காண்கிறாயா?
சூழ்நிலை மோசமாகும்போது நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
எல்லாம் அறிந்த தேவன் உன்னோடு இருக்கும் போது நீ அறியாத எதிர்காலத்தைக் குறித்து ஏன் கவலைப்படுகிறாய்?
தனிமையாக்கப்பட்டு நெருக்கப்படுவதாக ஏன் உணருகிறாய்?
நீ நிராகரிக்கப்பட்ட அன்பு செலுத்தப்படாத நபராக ஏன் உணருகிறாய்?
உடைக்கப்பட்டு நம்பிக்கையற்ற சூழ்நிலையை ஏன் கடந்து செல்கிறாய்?
உனக்கு நேரம் கொடுக்காத நபர்களுக்கு பின்பாக ஏன் ஓடுகிறாய்?
உன்னை விசாரிக்கிறவர் யார் என்பதை நீ காணும் போது புத்திக்கெட்டாத சமாதானம் உன் இருதயத்தை ஆளுகை செய்யும்!
ஆம் உன் பிதாவாகிய தேவன் உன்னை பார்த்துக் கொள்பவர் - நீ அதை பார்க்கிறாயா?
ஆதியாகமம் 16:13
அப்பொழுது அவள்: என்னைக்காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக்காண்கிற தேவன் என்று பேரிட்டாள்
உன்னை விசாரிக்கிற வரை நீ பார் - அவர் ஒருபோதும் உன்னை கைவிடமாட்டார்! நீ அறியாத உன் எதிர்காலம் எல்லாம் அறிந்த தேவனுடைய கரத்தில் உள்ளது!! நீ அறிந்திருக்க வேண்டியது எல்லாம் தேவன் உன்னை விசாரிக்கிறார் என்பதே!!!
Comments