நீ அனேகரில் ஒருவராக இருக்கலாம் ....
அவர் உன்னை ஒரு தனித்துவமான நபராக இன்னும் பார்க்கின்றார் ...
நீ மனித கண்களுக்கு மறைக்கப்படலாம் ....
உன் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் கவனிக்கிறார் ....
உனக்கு முன்னே உள்ளவர்கள் முன் நீ தாழ்ந்த ஒரு நபரை போல உணரலாம் ....
அவர் உன்னிடம் மறைந்திருக்கும் மதிப்பை காண்கிறார் ....
உன் வாழ்க்கைக்காக உனக்கு சொந்த ஆசைகள் இருக்கலாம் ....
நீ யார் என்பதும், அவர் உன்னை எங்கு அழைத்துச் செல்லப் போகிறார் என்பது அவருக்குத் நன்கு தெரியும் ....
நீ எடுக்க வேண்டிய அடுத்த அடி உனக்கு தெரியாது ....
உன் வாழ்க்கையின் வரைபடம் அவரிடம் உள்ளது ....
1 கொரிந்தியர் 8: 3
தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.
இது நல்ல செய்தி! அவர் உன்னை அறிந்திருக்கிறார், உன் எதிர்காலத்தை அவர் அறிவார் !! உன்னை எப்படி அழைத்துச் செல்வது என்பது அவருக்குத் தெரியும் !! நீ அவரால் நேசிக்கப்படுகின்றாய் என்பதை அறிந்து கொள் !!!


Comments