தேவனுடைய வார்த்தையை உன்னிடம் பகிர்ந்து கொண்ட தலைவர்களை நினைத்து பார்...
உன் வழியில் உதவும்படி அனுப்பப்பட்ட தூதர்களுக்காக நீ ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறாயா?
உன்னிடம் தேவ வார்த்தையை பகிர்ந்துகொண்ட தலைவர்களுக்காக ஜெபிக்கிறயா?
தேவன் அருளிய பொருளாதார ஆசீர்வாதத்திற்கு நன்றி சொல்ல நேரம் எடுக்கிறோம்...
தேவன் உன்னை உயர்த்துவதற்கு பயன்படுத்திய கருவிகளை நினைத்து திரும்பிப் பார்த்து அவருக்கு நன்றி சொல்லுகிறாயா?
உன் விசுவாச வாழ்க்கைக்கு விதைகளை விதைத்தவர்களுக்காக ஜெபிக்க மறவாதே...
உன் ஜெபங்கள் மாத்திரமே நீ அவர்களுக்கு திரும்ப செலுத்தும் நன்றிக்கடன்...
எபிரேயர் 13:7
தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
அனுப்பப்பட்ட தூதர்களுக்காக நன்றி சொல்லு! அனேகருக்கு அவர்கள் ஆசீர்வாதமாய் இருக்கும்படி ஜெபம் பண்ணு!! உன்னுடைய வாழ்க்கையில் தேவ வார்த்தையை பகிர்ந்துகொண்ட தலைவர்களை நினைத்துக்கொள்!!!


Comments