எதை பின் வைத்து போகிறாய்?

நீ எதை பின் வைத்து போகிறாய்....


அடுத்த தலைமுறைக்கு எதை பின் வைத்து போகிறாய் என்பது மிகவும் முக்கியம்.....


குடும்பத்திலோ வேலை ஸ்தலத்திலோ நீ எதை வைத்திருக்கிறாயோ அதை தான் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்....


நீ ஜெபிக்கின்ற நபராக இருந்தால் உன்னை பின்பற்றுகிறவர்கள் அப்படியே இருப்பார்கள்....


உன் மாம்ச இச்சைகளை நீ நிறைவேற்றுகிற நபராக இருந்தால் உன் சந்ததியும் அதையே செய்யும்....


நீ தேவனை நேசித்து அவருக்கு முன்னுரிமை கொடுத்தால் உன்னை பின்பற்றுகிறவர்களும் தேவனை நேசிப்பார்கள்....


ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விட சரீரப் பிரகாரமான ஆசீர்வாதங்கள் உனக்கு முக்கியமாக இருந்தால் நீ எதை பின் வைத்து போகிறாய் என்பதை சிந்தித்துப் பார்....


நீதிமொழிகள் 13:22


நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்


நீ எதை பின் வைத்துப் போகிறாய்? நீ வாழும் விதம் முக்கியமானது!! ஆசீர்வாதங்களைப் இன் வைத்து செல்!!!


2 views

Recent Posts

See All
hop church logo.jpg