எழும்பு

உன் கால் சறுக்கி கீழே விழும்போது....


எழுந்து நடக்க யாராவது சொல்ல காத்திருக்கிறாயா?


தேவனோடு நீ நடக்கும் காரியங்களில் விழுந்து போகும்போது.....


நீ ஒருபோதும் எழும்ப முடியாது என்று சொல்லும் பொய்யனுடைய வார்த்தைக்கு செவி கொடுக்கிறாய்.....


நீ கீழே விழுந்து விட்டாய் என்று நினைக்கிறாயா?


ஒரு சத்துரு உன் மீது சந்தோஷப்பட விடாதே....


ஆம்! இது எழுந்து நடக்க வேண்டிய நேரம்....


தேவனுடைய ஒத்தாசையால் உன்னால் திரும்ப எழும்ப முடியும்!


மீகா 7:8


என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்


எந்த இடத்தில் விழுந்து போய் இருக்கிறாயோ இப்பொழுது அதிலிருந்து எழும்பி ஒடுவதற்கான நேரம்! உளையான சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுக்க வல்லவரான அவர் சத்தத்தைக் கேள்!! அங்கேயே விழுந்து கிடக்காமல் எழும்பு!!!


2 views

Recent Posts

See All
hop church logo.jpg