கேட்கிற நபரா? செய்கிற நபரா?
- HOP Church
- Oct 19, 2020
- 1 min read
கேட்கிற நபரா?செய்கிற நபரா?
எது சரி எது தவறு என்று அறிந்து கொள்வதினால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை....
சடங்காக வேதத்தை வாசிப்பது என்றால் மறுரூபம் உண்டாகப் போவதில்லை....
வேதத்தில் நீங்கள் அறிந்திருப்பது என்ன என்பது அதை நீங்கள் அப்பியாசப்படுத்தும் வரை உதவப் போவதில்லை....
அவர் வார்த்தையின் படி வாழ நீங்கள் தீர்மானம் செய்யும்போது நீங்கள் பேசுகிறதை செய்வீர்கள்...
செய்கிற நபராக இரு அவர் வார்த்தையை கேட்பதோடு நிறுத்தி விடாதே!
ரோமர் 2:13
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
அவர் வார்த்தை சொல்வதின்படி செய்! தெய்வ வார்த்தைக்கு உன்னை ஒப்புக்கொடு!! மறுரூபம் ஆகு - மறுரூபம் ஆக்கு!!!


Commentaires