அன்னாள் மனம் கசந்து அழும் வரை பெண்ணினாள் அன்னாளை வார்த்தையினால் குத்தும்படி கர்த்தர் அனுமதித்தார்...
நீ ஆசீர்வாதத்தின் தேவையை உணரும் வரை பிறர் உன்னை குத்தும்படி தேவன் அனுமதிக்கிறார்...
இது அன்னாள் புண்பட்ட உணர்விலிருந்து அழுதபோதுதான் நடந்தது...
அவள் தேவ சமூகத்தில் அழுது தன் இருதயத்தை ஊற்றின போதுதான் சாமுவேல் என்ற ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டாள்...
நீ ஒதுக்கப்பட்டு குத்தப்பட்டு வேதனைப்படும் போது...
தேவன் உன் கண்ணில் இருந்து வடியும் ஒவ்வொரு கண்ணீரையும் கணக்கில் வைத்துள்ளார்...
1 சாமுவேல் 1:7
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்
நீ குத்தப்படும்போது தேவனிடம் உன் இருதயத்தை ஊற்றி விடு! தேவன் உன் இருதயத்தின் அழுகுரலை கேட்கிறவர்!! நீ இருதயத்தை ஊற்றி விட்டபின் உன் சாமுவேல் வந்து கொண்டிருக்கிறது என்பதை விசுவாசி!!!


Comments