தேவன் உன்னை சந்திக்கும் இடத்துக்குப் போ!
தினமும் தேவ சத்தத்திற்கு செவி கொடுக்கிறாயா?
அவரை சந்திக்கும்படி மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு செல்கிறாயா?
அவர் பிரசன்னத்தில் மூழ்கும்படி தாகம் உனக்கு உண்டா?
உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு!
அவரை சந்திக்கும்படி உனக்கு ஒரு இடம் வேண்டும்....
தேவனோடு உனக்குள்ள அன்பின் உறவிற்கு என்று ஒரு தனிப்பட்ட நேரம் உனக்கு வேண்டும்....
அவர் அன்பிற்காக ஏக்கம் உனக்கு உண்டா?
யாத்திராகமம் 25:22
அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்
தேவனுடைய சத்தத்தை கேட்கும் இடமாகிய கிருபாசனத்தண்டை ஓடு! அவர் சத்தத்தைக் கேட்பது எத்தனை பெரிய சிலாக்கியம்!!!


Comments