கீழ்ப்படி

கீழ்ப்படிதலில்லாமல் உன் காணிக்கைகளையும் தாராள வெகுமதிகளையும் கர்த்தர் பொருட்படுத்தமாட்டார்...


கீழ்ப்படிதலில்லாமல் உன்னுடைய எந்த ஆவிக்குரிய செயலும் பரலோகத்திற்கு பயணச்சீட்டை பெற்றுத்தராது...


அனேக நேரங்களில் கீழ்ப்படிதல் என்னும் பரிட்சை தேவனுடைய ஆசீர்வாதத்திற்கு முன்பாக நடத்தப்படும்...


பாதி கீழ்ப்படிவதும் கீழ்படியாமையே...


தாமதமாக கீழ்ப்படிவதும் கீழ்ப்படியாமையே...


தேவன் உன்னிடம் முழு கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்...


நீ கர்த்தரை கனப்படுத்துவாய் என்றால் அவருக்கு கீழ்படிவாய்...


1 சாமுவேல் 15:22


கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.


உன் இருதயத்தை இன்னும் கடினப்படுத்தாதே! தேவன் சொல்வதை அப்படியே செய்!! உன் இருதயம் அவரோடு இருந்தால் தேவனுக்குக் கீழ்படிவது கடினமாயிராது!!!


4 views

Recent Posts

See All
hop church logo.jpg