சந்தோஷமாய் இரு! உன் சந்தோஷத்தை இழந்து விடாதே!
நீ எதிர்பார்த்த விதமாக காரியங்கள் நடக்காவிட்டால் மனம் சோர்ந்து போகாதே...
பதில் அளிக்கப்படாத ஜெபங்களை நினைத்து கசப்பை உன் மனதில் வளர்த்துக் கொள்ளாதே...
நீ பெலவீனமாகி உன் சரீரம் சோர்வடையும் பொழுது ஆண்டவருடைய அற்புத வல்லமையை சந்தேகிக்காதே...
உன் பையில் பணம் இல்லாத போதும் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாத போதும் கவலைப்படாதே...
பிறர் உன் பெயரை இகழும் போதும் உனக்கு அவப்பெயர் கொண்டுவர நினைக்கும்போது அதை எண்ணி விரக்தியடையாதே...
சூழ்நிலையைப் பொறுத்து நம்முடைய சந்தோஷம் தீர்மானிக்கப்படுவதில்லை...
எனது சந்தோஷம் நான் யார் என்பதினால் அல்லது நான் என்ன வைத்திருக்கிறேன் என்பதினால் உண்டாவது அல்ல...
என் சந்தோஷத்தை நான் நிற்கும் கண்மலையே நிர்ணயம் பண்ணுவார்...
பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
நீ மோசமான சூழ்நிலையில் இருக்கும்பொழுது உன்னுடைய சந்தோஷத்தை இழந்துவிடாதே! சூழ்நிலைகள் மாறலாம் ஆண்டவர் மாறாதவர்!! சந்தோஷமாய் இருக்க ஒரு காரணம் உண்டு- நீ நிற்கும் கண்மலை அசையாமல் உறுதியானது!!!


Comments