சரியான காரியங்கள்

தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்துவதற்கு உன்னை அனுமதிப்பதே சரியான மனப்பான்மை....


நீ இதை செய்யும் பொழுது தேவன் உன்னில் பிரியமாய் இருக்கிறார்...


இதுவே சரியான மனப்பான்மை!


நீ பிறரை காயப்படுத்தியதை நினைத்து வருந்தி ஆண்டவருடைய பிரசன்னத்தில் மன்னிப்பு கேட்டு அறிக்கையிட்டால் தேவன் மன்னித்து மறந்து விடுவார்...


இதுவே சரியான நடத்தை!


நீ இதை செய்தபின்பு பாவத்தின் குற்ற உணர்ச்சியோடு வாழ வேண்டிய அவசியமில்லை...


இருதயத்திலிருந்து மனம் திரும்பப்பட்டு அறிக்கையிட்ட பாவங்களை தேவன் ஒருபோதும் நினைக்க மாட்டார் அதை முற்றிலும் தூய்மையாக்கி விட்டார்...


இதுவே சரியான புரிதல்!


ஏசாயா 43:18


முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.


உன் தவறை ஒப்புக்கொள்ள முந்திக் கொள்! அறிக்கையிடு அதை திரும்ப செய்யாதே!! எல்லா குற்றவுணர்ச்சியில் இருந்தும் உன்னை விடுவித்துக் கொள்!!! உன் பரம தகப்பன் உன்னை இன்னும் கணக்கில் வைத்து இருக்கிறார்!!!!


0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041