சுத்தம் பண்ணப்படுவது நன்மைக்கே

நாம் தேவனோடு நடந்து செல்லும்போது கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வது சுலபமான காரியமல்ல....


அடிக்கடி நாம் கேட்கும் கேள்வி "ஏன் எனக்கு ஆண்டவரே?"....


தேவன் சில நபர்களையும் சில பொருட்களையும் உன் வாழ்விலிருந்து எடுத்துதான் ஆகவேண்டும்.....


உன் வாழ்க்கையில் விரிவாக்கம் உண்டாகும்படி தேவன் அதை செய்கிறார்....


உன்னை சுத்தம் செய்யும்போது தேவன் உன்னை அறுவடைக்கு ஆயத்தம் பண்ணி கொண்டிருக்கிறார்....


தேவன் அந்த பொருட்களையும் அந்த பொருட்களையும் உன் வாழ்வில் இருந்து எடுத்துப் போட அவருக்கு விட்டுக்கொடு....


யோவான் 15 : 2


என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்


நீ வேதனைப் படும்போது தேவனில் களிகூறு! தேவன் என்ன செய்யப்போகிறார் என்பதை உன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது!! வளர்ச்சிக்காகவும் விரிவாக்கத்திற்காக தேவன் உன்னை ஆயத்தம் பண்ண விட்டுக்கொடு!!!


0 views

Recent Posts

See All
hop church logo.jpg