ஜெபத்தின் வல்லமை

அவன் காலம் முடிய போகிறது என பிசாசுக்கு தெரியும்....


அவன் காலம் முடியப் போகிறது என்று உனக்கு தெரியுமா?


பிசாசுக்கு ஜெபத்தின் வல்லமை தெரியும் நீ முழங்காலில் நிற்கும் போது அவன் நடுங்கும்....


ஜெபத்தின் வல்லமையை நீ அறிவாயா?


உண்மையான ஜெபம் என்ன செய்யும் என்பது உனக்கு தெரியுமா?


பிசாசு கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது அவனுக்கு கொடுக்கப்பட்ட காலம் கொஞ்சம் என்பதை நினைவுபடுத்து....


ஓ தேவ பிள்ளையே! முடிவை நீ அறிந்திருக்கிறபடியினாலே பயப்படாதே....


முழங்காலில் யுத்தம் பண்ணு....


ஊக்கமான ஜெபம் பிசாசை பயமுறுத்தும்....


வெளிப்படுத்தின விசேஷம் 12 : 12


ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.


பிசாசு உன்னை அதிகமாய் துன்புறுத்தும் போது அவன் காலம் கொஞ்சமே என்பதை அவனுக்கு நினைவூட்டு! இன்று நடப்பதை பார்த்து சோர்ந்து போகாதே!! உனக்கு ஒரு மகிமையான முடிவு காத்திருக்கிறது!!!


3 views

Recent Posts

See All
hop church logo.jpg