ஜெபத்தில் தேவனிடம் கொண்டு செல்!

யாக்கோபு தேவன் அவனுடைய யுத்தத்தை எப்படி நடத்தினார் என்பதை பார்த்தான்....


அவனுக்குத் தீங்கு செய்ய நினைத்த சத்துருவுக்கு அனுமதி கிடைக்கவில்லை....


அவனுடைய பலத்தினாலும் திறமையினாலும் அவன் பாதுகாக்கப்படவில்லை....

தேவனுடைய கரமே அவனை அழிவில் இருந்து மீட்டது....


தேவனுடைய கரத்தை பார்த்தபின்பு.....


அவருடைய அன்பை அனுபவித்த பின்பு....


அவன் இன்னும் அவனுடைய பலத்தையே சார்ந்து இருக்கிறான்...


யாக்கோபை போல தேவன் கடந்த காலத்தில் செய்ததை எளிதில் மறந்து விடுகிறாயா?


ஆதியாகமம் 32:20


இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.


தேவன் கடந்தகாலத்தில் உன்னை எப்படி விடுவித்தார் என்பதை மறந்து போகாதே! அவர் முன்னேற்றத்தை நடத்தட்டும் - உன் அறிவைக் கொண்டு திட்டமிடாதே!! தேவனை சார்ந்து கொள்- ஜெபத்தில் அவரிடம் கொண்டு செல்!!!0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041