ஜெபம் கிரியை செய்யும்!!!

ஜெபம் கிரியை செய்யும்! ஆம் நிச்சயமாக!!


தேவன் செவி கொடுக்கிறவர். ஆம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் செவி கொடுக்கிறார்....


தேவன் மனதுருக்கம் உடையவர். நம்முடைய சூழ்நிலையையும் கண்ணீரும் அவரை அசையப் பண்ணும்....


தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் நாம் பேசும்போது அவர் திரும்ப பேசுவார்.....


ஊக்கமான ஜெபத்திற்கு தேவன் பதில் தருகிறார் - உண்மையான ஜெபத்தை அவர் நிராகரிப்பதில்லை....


தேவன் நம்முடைய ஜெபங்களை கனம் பண்ணுகிறார் - அவை தேவனுக்கு முன்பாக தூபம் போல் இருக்கின்றன.,.


அவர் நம் வார்த்தைகளை கேட்டு நம்முடைய இருதயங்களை அறிகிறார்....


தேவன் அன்புள்ளவர். அவரைப்போல நம்முடைய வார்த்தைகளை அறிந்துகொள்ள யாராலும் கூடாது....


நீதிமான் செய்யும் ஊக்கமான ஜெபம் வல்லமையுள்ளது - ஏனென்றால் அது கிரியை செய்யக்கூடியது!


யாக்கோபு 5:16


நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.


ஜெபம் கிரியை செய்யும் - இது எவ்வளவாய் நம்மை உற்சாகப்படுத்துகிறது! தேவன் நாம் அவரோடு பேசி செலவிடும் நேரத்தை மதிக்கின்றார்!! வருத்தப் படுவதை நிறுத்திவிட்டு ஜெபத்திலே எல்லாவற்றையும் தேவனிடம் கொண்டு செல் - ஜெபம் பெரிய செய்யும்!!!


1 view

Recent Posts

See All
hop church logo.jpg