தேவன் அடையாளம் தர காத்திரு!
- HOP Church
- Jan 29, 2021
- 1 min read
உன் வழியை காட்டுபவர் யார்?
பிரபலமான கருத்துக்களால் நீ வழிநடத்தப் படுகிறாயா?
எந்த அடிப்படையில் நீ தீர்மானங்களை எடுக்கிறாய்?
தேவன் கொடுக்கும் அடையாளத்திற்காக நீ காத்து இருக்கிறாயா?
தேவன் தம்முடைய வார்த்தையிலிருந்து பேசுகிற சத்தத்துக்கு செவி கொடுக்கிறாயா?
இஸ்ரவேல் ஜனங்களின் பிரயாணங்களில் மேகஸ்தம்பம் வழி நடத்தியது....
உன்னை வழிநடத்தும் ஆவியானவரால் நீ நடத்தப்படுகின்றாயா?
வைக்கும் முன் தேவனுடைய அடையாளத்துக்காக காத்திரு!
யாத்திராகமம் 40:36-37
வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்
அடி எடுத்து வைக்க அவசரப்படாதே! தேவன் உன் நடைகளை வழிநடத்த விடு!! தீபன் உன்னை வழி நடத்துவார் ஆனால் உன் நடைகள் பிசகுவது இல்லை!!!


Comments