உனக்கு உண்மையுள்ளவராக இருக்கிற தேவனுக்கு நீ உண்மையுள்ள நபராக இரு....
பல நேரங்களில் நாம் உண்மை அற்றவர்களாக இருந்த போதிலும் தேவன் உண்மையுள்ளவராகவே இருந்தார் ...
அவர் சமூகத்தை ஜெபத்தில் தேடு....
ஒவ்வொரு முறையும் நீ அன்பை தேடி அலையும்போது தேவன் உனக்கு பின்பாக தான் உன்னுடைய பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தார்.....
அவருடைய விலைமதிப்பில்லா வார்த்தையின் மூலம் அவருக்கு செவி கொடு....
உன் நாள் முழுவதும் யாருக்கு சேவை கொடுக்கிறாய்?
தேவனுடைய ராஜ்யத்திற்கு பயனுள்ள பாத்திரமாக மாறும் படி அவருடைய சரீரத்துடன் இணைந்து கொள்....
அவரை துதிக்கும் படியாகவும் அவருடைய நற்செய்தியை அறிவிக்கும் படியாகவும் நீ ஏற்படுத்தப்பட்டாய்....
யோவான் 1 : 12
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்
தேவன் என்றும் உண்மையுள்ளவர் ஆக இருக்கிறார்! நீ தேவனுக்கு உண்மையுள்ள நபராக இருக்கிறாயா?? அவரிடம் ஆசிர்வாதத்தை கேட்பதற்கு முன்பு அவருடைய பிள்ளையாக வாழ்ந்திடு!!!
Comments