யுத்தத்தை செய்வது நானாக இருந்தால்....
வருத்தப்பட ஒரு காரணம் உண்டு....
என்னுடைய பெலத்தினால் ஓட்டத்தை நான் ஓடுவதாக இருந்தால்....
முடிவை சென்றடைவதை குறித்த குழப்பம் இருக்க வாய்ப்பு உண்டு.....
என்னுடைய எதிர்காலம் நான் யார் என்பதையோ நான் எதின் வழியாய் கடந்து செல்கிறேன் என்பதையோ சார்ந்து இருக்குமானால்....
நான் மன சோர்வாய் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு....
நான் உறுதியான இடத்திலே நிற்கிறேன். நான் ஏன் சோர்வடைய வேண்டும்?
சங்கீதம் 56:4
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனுடைய கரத்தில் என் வாழ்க்கை இருக்கிறது! காற்றையும் கடலையும் அதட்டிய அவரை நோக்கி என் ஜெபத்தை செய்கிறேன்!! நான் தேவனை நம்பியிருக்கிறேன், எப்படி சோர்ந்து போவேன்???


Comentarios