இத்தனை வருஷங்களுக்கு பின்பு எவ்வளவு விலைமதிப்பில்லா பாடத்தை யோசிப்பு கற்றுக்கொண்டான்!
உன் வாழ்வில் நடக்கும் கெட்ட சம்பவங்களுக்கு எந்த மனுஷனும் காரணமல்ல.....
உன் வழியில் வரும் எந்த காரியத்திற்கும் தேவன்தான் அனுமதி கொடுக்க வேண்டும்.....
மனுஷரிடம் கோபம் கொண்டு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை....
மற்றவர்கள் மேல் பழி சுமத்தி வைராக்கியம் பாராட்டாதே....
தேவன் அனுமதிக்காமல் எந்த மனுஷனும் உனக்கு எதிர்த்து நிற்க முடியாது!
ஆதியாகமம் 45:5
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்
உன் வாழ்க்கை மனித ஞானத்தினாலே நிர்ணயிக்கப்படுவது அல்ல! உன் வாழ்க்கைக்கு தேவன் எதை திட்டமிடுகிறாரோ அதுவே நடக்கும்!! அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும்!!!
Comments