சில சமயங்களில் நீங்கள் பலனாக கருதுவது எதுவோ அதை தேவன் உடைந்து போக பண்ணுவார்....
உங்களை உடைப்பதற்காக அல்லது சிறுமை படுத்துவதற்காக அல்ல விலைமதிப்பில்லாத பாடங்களை கற்றுக் கொடுக்கும்படியாக....
உன் பெலன் எல்லாம் குன்றி கொண்டே போகும்போது தேவனுடைய பெலனை நாடி தேடு....
உன் பெலவீனத்தில் தான் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும்....
நீ பெலவீனன் என்றும் அவருடைய ஆளுகை உன் வாழ்க்கையின் சூழ்நிலைகளில் இருக்கிறது என்றும் நீ அறிக்கை செய்யும்போது....
இப்பொழுது எந்தப் பொருளுக்கும் எந்த நபருக்கும் மகிமை கொடுக்க உன்னால் முடியாது ஏனென்றால் காரியங்களை வாய்க்க செய்கிறவர் அவரே....
நியாயாதிபதிகள் 7:7
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறு பேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக் கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.
மீதம் இருப்பதை வைத்து தேவனால் உன்னை விடுவிக்ககூடும்! அவர் - அவர் ஒருவரால் மட்டுமே கூடும்!! தேவன் ஒன்றை கற்றுக் கொடுப்பார் ஆனால் அதை உன்னால் மறக்க இயலாது!!!


Comments