தேவனுக்கு காத்திரு
- HOP Church
- Dec 1, 2020
- 1 min read
நீ தேவனுக்காக காத்து இருக்கிறாயா?
அதிக நேரம் காத்திருக்கும் அனுபவம் உனக்கு உண்டா?
தேவன் பதில் கொடுக்க நேரம் எடுக்கும்போது விரக்தி அடைகிறாயா?
அவர் சித்தத்தை அறிந்து கொள்ள காத்திருக்கும் அனுபவம் உனக்கு உண்டா?
உதவிக்காகவும் வழியை அறிந்துகொள்ளவும் நீ யாரை நோக்கி பார்க்கிறாயா?
தேவன் உனக்காய் காத்திருக்கிறார்!
அவர் வாசல்களில் சந்தோஷத்தோட காத்திருக்க நீ ஆயத்தமா?
சங்கீதம் 25:5
உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்
தேவனுக்காக காத்திருக்கும் போது நீ வெட்கப்பட்டுப் போவதில்லை! அவர் உன் வாழ்வில் கிரியை செய்யும்போது பொறுமையுடன் காத்திரு!! அவர் யார் என்பதை நீ அறிந்திருப்பாய் என்றால் காத்திருப்பு இனிமையான அனுபவமாக இருக்கும்!!!


Comments