தேவனுக்கு பயன்படும் வாழ்க்கை
- HOP Church
- Dec 16, 2020
- 1 min read
தேவனுக்கு பயன்படாத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது!
நீ தற்செயலாக அல்ல, வேண்டும் என்றே உருவாக்கப்பட்டாய் ....
தேவன் உன்னை ஒரு நோக்கத்துடன் படைத்தார் ...
உன்னை சுற்றியுள்ள பலருக்கு நீ பயனுள்ள நபராக இருக்கலாம், கேள்வி என்னவென்றால், "நீ ஆண்டவருக்கு பயனபடுகிறாயா?"
ஆண்டவர் உன்னை கணக்கில் வைக்க முடியுமா?
ஆண்டவர் உன்னை நம்ப முடிந்தால், அது எத்தனை பெரிய பாக்கியம்??
மத்தேயு 21: 18,19
காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
உன்னை படைத்த தேவனுக்கு பயனுள்ள நபராய் இரு! நீ ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்டாய் !! அதை நிறைவு செய்ய வாழு - தேவனுக்கு பயன்பட ஆயத்தமாயிரு !!!


Kommentare