தேவன் சிறந்ததை செய்பவர்

தேவன் சிறப்பான திட்டங்களை ஏற்படுத்துகிறார்!


உன் வாழ்வில் நீ திட்டமிட வேண்டும்....


இது உண்மைதான் - நாம் திட்டமிட தவறும் போது நாம் தவறுவதற்காக திட்டமிட்டு கொண்டிருக்கிறோம்....


அதே நேரத்தில் நினைவில் கொள்ளவேண்டும் - தேவன் நம்முடைய திட்டங்களுக்கு மேலாக எதிர்பார்ப்புகளுக்கு மேலாக கிரியை செய்கிறவர்....


நீ தவறும்போது வருத்தப்படாதே...


உன் கண்களைத் திறந்து தேவன் உனக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பார்...


உன் வாழ்க்கையை அவர் கரத்தில் ஒப்புக்கொடுக்கும் போது அவருடைய திட்டத்தின்படி உன்னை நடத்துவார்.....


ஆம் அவருடைய திட்டங்கள் என்றும் நிலை நிற்கும்!


நீ கனவு கூட கண்டிராத ஒரு ஸ்தலத்தில் அது உன்னை கொண்டு நிறுத்தும்...


நீதிமொழிகள் 19:21


மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.


உன் வாழ்க்கைக்காக திட்டமிடு! அது தவறும்போது வருத்தப்படாதே!! நினைவில் கொள் தேவன் உனக்காக திட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார் அவைகள் அதிசயமான திட்டங்கள்!!!


0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041