தேவன் சிறந்ததை தருவார்

தேவன் தனித்துவமாய் தன் அற்புதங்களை நடப்பிப்பார்....


இதுதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முதல் அற்புதம்....


கல்யாண வீட்டில் குறைவு ஏற்பட்ட போது அவர் தேவையை மட்டும் சந்திக்கவில்லை....


அவர் திராட்சரசத்தை கொடுத்தார் அது முந்தினதை காட்டிலும் சுவையுள்ளதாக இருந்தது....


தேவன் தேவையை சந்திக்கும்படி ஜெபத்துடன் காத்து இருக்கிறீர்களா?


உன்னுடைய தேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்....


நினைவில் கொள்! யெகோவா யீரே தேவையை சந்திப்பதுடன் நிறுத்த மாட்டார்....


ஆம் அவர் சிறந்ததை மற்றும் நீ எதிர்பாராத ஆசிர்வாதத்தை கொடுத்து உன்னை ஆசீர்வதிப்பார்..


யோவான் 2:10


எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்


சிறந்தது உனக்காக காத்திருக்கிறது! அவர் வேளை வருவதற்காக அவர் காத்திருக்கிறார்!! நீ வேண்டுவதை அல்ல அவர் விரும்புவதை உனக்குத் தருவார்!!!


0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041