இது மிகவும் விசித்திரமானது ....
தேவனை சந்தித்த பிறகு ...
தேவனின் குரலைக் கேட்ட பிறகு ....
தேவனிடமிருந்து வாக்குறுதிகளைப் பெற்ற பிறகு ....
தேவன் அவனுடன் ஒரு உடன்படிக்கை செய்த பிறகு ...
இந்த ஆபிரகாமால் தேவனை நம்ப முடியவில்லை!
விசுவாசத்தின் தந்தை விசுவாசமுள்ள மனிதனாக தனது வாழ்க்கையைத் தொடங்கவில்லை ....
அவன் தனது விசுவாச பயணத்தில் ஏற்ற தாழ்வுகளைக் சந்தித்தான் ....
அவன் தன் வாழ்க்கையை தேவனுக்கு கொடுப்பதன் மூலம் தனது நடைப்பயணத்தைத் தொடர்ந்தான் ....
இன்று நீ ஒவ்வொரு அடியிலும் தேவனுக்கு கீழ்ப்படியத் தயாராக இருந்தால், விரைவில் நீ விசுவாசமுள்ள நபராகிவிடுவாய்!
ஆதியாகமம் 17: 17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,"
தேவனுடன் நட! விசுவாசிப்பதற்கு கடினமாக இருக்கும்போது அவருடன் தொடர்ந்து நட !! ஒவ்வொரு அடியிலும் தேவனிடம் உன்னை ஒப்புக் கொடு- நீ அவருடன் பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் நீ விசுவாசிக்கும் நபராக இருப்பாய் !!!


Comments