நீ இன்று சந்திக்கும் ஒவ்வொரு நிந்தைக்கும் ஒரு நோக்கம் உண்டு....
இன்று உன்னை உருக்கும் ஒவ்வொரு பெலவீனமும் ஒரு கதையாய் உருவெடுக்கும்...
நீ இன்று தழுவும் ஒவ்வொரு தோல்வியும் உன் முடிவுக்கு நேராக தோள்களில் சுமந்து செல்லும்....
நீ இன்று நடக்கும் ஒவ்வொரு பள்ளத்தாக்கு உன்னை உயர் பதவியில் நிறுத்தும்....
நீ இன்று சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும் விரைவில் சாட்சியாக மாறும்....
தேவன் ஒரு நோக்கத்தை வைத்து இருக்கிறார் - இவை எல்லாவற்றின் மூலமாக அவர் மகிமையை வெளிப்படுத்த!
ஏசாயா 49:3
அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.
நாம் அவர் மகிமையை வெளிப்படுத்தும் படியாக உண்டாக்கப் பட்டவர்கள்! அவருக்கு சொந்தமாக இருப்பது எத்தனை பெரிய சிலாக்கியம்! அவர் நோக்கம் உன் வாழ்வில் நிறைவேற விட்டுக் கொடு!!!


Comments