தேவனை நினைவில் கொள்!

அவன் சோதனையில் விழுந்துபோகவில்லை ...


அவன் எல்லா மனிதர்களின் பார்வையிலும் தயவைக் கண்டான்...

அவன் தனது அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்றான் ....

அவனால் அவன் தங்கியிருந்த வீடு ஆசீர்வதிக்கப்பட்டது ....

அவன் அடிமையாக விற்கப்பட்ட இடத்தில் அதிகாரம் பெற்றான் ...

அவன் வெட்கப்பட்ட இடத்தில் உயர்த்தப்பட்டான்....

கர்த்தர் அவனோடு இருந்ததால் இவை அனைத்தும் சாத்தியமானது!

அவன் கடந்து வந்த எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை மறக்கவில்லை - கர்த்தர் அவனுடன் இருந்ததில் ஆச்சரியமில்லை!

ஆதியாகமம் 39: 23

கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை

நீ எங்கிருந்தாலும் தேவனை நினைவில் கொள்! அவர் எப்போதும் உன்னை பார்த்துக் கொண்டிருப்பதை நினைவில் கொள் !! தேவன் உன்னுடன் இருக்கும்போது - உன் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் !!!


0 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041