முன் செல்வதற்குமுன் ஆண்டவரை கேட்கிறாயா?
நம்முடைய பெலவீனத்தில் தான் அவர் பெலன் பூரணமாய் விளங்கும் என்று நினைக்கிறோம்.....
அதனால் தான் நம்முடைய வாழ்வின் பல சூழ்நிலைகளை நாமே கையாளுகிறோம்.....
உனக்கு உண்மை தெரியுமா? நம்முடைய பலத்திலும் நமக்கு உதவி செய்பவர் அவரே....
உன் வாழ்வில் எல்லா கரிசனைகளையும் ஜெபத்துடன் அவரிடம் எடுத்த செல்கிறாயா?
தீர்மானம் எடுப்பதற்கு முன் அவருடைய ஆலோசனையை கேட்கிறாயா?
உன் ஞானத்தினாலும் அறிவினாலும் முன்னேறலாம் என்று நீ நினைத்தால் எல்லாம் குழப்பம் ஆகும்!
யோசுவா 9:14
அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்
தேவனுடைய அங்கீகாரம் இல்லாமல் அசையாதே! முன்னேறிச் செல்வதற்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் தேவனுடைய அங்கீகாரமே முக்கியம்!! அவர் ஆலோசனை உன் வாழ்வை வழி நடத்தட்டும்!!!


コメント