தேவனின் சிறந்த படைப்பு!
- HOP Church
- Oct 12, 2020
- 1 min read
தேவன் எளிதில் விட்டுவிட மாட்டார்....
தூக்கி எறியப்பட்ட பொருட்களை வைத்து திறமைசாலி வேலை செய்வார்....
தள்ளப்பட்டவகைகளை வைத்து வேலை செய்வதில் தேவன் திறமை மிக்கவர்....
ஒன்றும் இல்லாதவர்களை சிறந்த படைப்பாக மாற்றுவதில் தேவன் பெயற்பெற்றவர்.....
உலகமே நீ முன்னேற மாட்டாய் என்று சொன்னாலும் தேவன் ஒருபோதும் அப்படி சொல்வதில்லை....
தேவன் தம்முடைய பிள்ளைகளை நேசிக்கிற உண்மையுள்ள தகப்பன் வழி விலகினது திரும்ப கொண்டுவர அவருக்கு தெரியும்....
அக்கினியை அழிந்து போக அவர் விடமாட்டார் அதைப்பற்றி எரியும்படி செய்வார்...
நீ இருக்கிற வண்ணமாக அவரிடம் ஓடு!
ஏசாயா 42:3
அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
அவர் ஒருபோதும் உன்னை விட்டுக்கொடுக்க மாட்டார்! அவர் இன்னும் என்னை நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்!! நம்பிக்கையோடும் அன்போடும் அவரிடம் ஓடு!!!


تعليقات