தேவனின் திட்டத்தில் கருவிகள்
- HOP Church
- Nov 22, 2020
- 1 min read
உன்னை சுற்றியுள்ள ஜனங்களால் சோர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறாயா?
அவர்களுக்காக தேவனைத் துதி, அவர்கள் தேவனுடைய திட்டத்திலேயே கருவிகள்....
நீ எழும்பும் போது உன்னை சுற்றியுள்ளவர்கள் பொறாமை கொள்கிறார்களா?
கவலைப்படாதே எவ்வளவாய் நெருக்கப்படுகிறாயோ அவ்வளவாய் எழும்புவாய்....
நீ என்ன சொல்லுகிறாய் என்ன பேசுகிறாய் என்பதை குறித்து நிந்திக்கபடுகிறாயா?
கவலைப்படாதே உன்னை நிந்தித்தவர்கள் உன்னிடம் வருவார்கள்....
எந்த சூழ்நிலையிலும் உன்னை புண்படுத்துகிறவர்களை சத்துருவாக பார்க்காதே....
ஆதியாகமம் 45:5
என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்
தேவன் அனுமதித்தால் ஒழிய ஒருவரும் ஆசீர்வாதத்திற்கு தடையாக நிற்க முடியாது! உன்னை வேதனை படுத்துகிற வர்களை சபிக்காதே ஆசீர்வதி!! உன்னை உருவாக்க அவர்கள் தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் - அதை மறந்து போகாதே!!!


Comments