தேவனின் நட்பு

தேவனுக்கு பயந்து நடக்கும்போது நீ அவருக்கு ஸ்நேகிதன் ஆக இருப்பாய்....


இது எப்படிப்பட்ட பயம்?


நீங்கள் உண்மையாய் ஒரு நபரை நேசிக்கும் போது அவரை புண்படுத்த துணியமாட்டீர்கள்...


நீங்கள் உண்மையாய் ஒரு நபரை நேசிக்கும் போது அவரை பிரியப்படுத்த வாழ்வீர்கள்....


ஒருவேளை நான் வேதனைப்படுத்தி விடுவேனோ என்ற பயத்தோடு எல்லா காரியங்களையும் செய்வீர்கள்.....


உன் தகப்பனாகிய தேவனுக்கு நீ பயந்து நடக்கிறாயா?


அப்படிப்பட்ட பயம் தேவனுடைய நட்பை உன் வாழ்வில் கொண்டு வரும்!


தம்முடைய நண்பர்களுக்கு தேவன் தம்முடைய உடன்படிக்கையை தெரியப் பண்ணுகிறார்! என்ன ஒரு சிலாக்கியம்!


ஆம்! நான் தேவனின் நண்பன்!


சங்கீதம் 25:14


கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.


உண்மையாக தேவனை நேசி! முழு இதயத்தோடு அவரைப் பின்பற்று!! இந்த நண்பன் உனக்காக தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார் வேறு யாரால் முடியும்???


2 views

H.O.P Church, 140, LB Road, Thiruvanmiyur, Chennai - 600041